பதுளை பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை (02) வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா – எல அலெக்சாண்டர் மாவத்தை பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே தப்பிச் சென்றுள்ளார்.
இந்த மாணவன் கடந்த முதலாம் திகதி பதுளை, துன்ஹிந்த – அம்பகஹஓய 5ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்திலேயே சிக்கி காயமடைந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.