காலி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கிங்தொட்ட பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 3 சீனப்பிரஜைகள் நேற்று (24) இணையவழி மோசடி தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது 5 கையடக்கத் தொலைபேசிகள், போலி வெளிநாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் 4 வங்கி அட்டைகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.