மஹியங்கனை லொக்கல் ஓயா ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (21) மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
17 வயதுடைய மாணவி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
சடலமாக மீட்கப்பட்ட மாணவி மற்றுமொரு மாணவியுடன் இணைந்து பதுளை நகரிற்கு மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற மாணவிகள் இருவரும் மீண்டும் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மாணவியை ரிதிமாலியத்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.