களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியிலுள்ள கடலில் மூழ்கி இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. இதில் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த பாக்யவன் செல்வநாயகம் என்ற 26 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் பிற்பகல் தனது நண்பர்களுடன் இணைந்து களுத்துறை வடக்கு, வஸ்கடுவ கடலுக்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், காணாமல் போன இளைஞனை தேடும் பணிகளில் களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.