மாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த 13 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் ஆவார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.