மூன்று தினங்களுக்குப் பின்னர் 51500 ரூபாய் பணத்தை உரியவரிடம் கையளித்த தனியார் பேருந்து சாரதி.
கொழும்பில் பணி புரிந்துவிட்டு சொந்த இடத்திற்கு திரும்பி வந்த 65 வயதுடைய ரக்காடு கிராமத்தைச் சேர்ந்த வீரையா அமிர்தவள்ளி என்பவர், தான் வந்த அரச பேருந்து நடத்துனரிடம் தனது உடைமைகள் அடங்கிய பொதிகளை ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் தான் இறங்கும் வேளையில் மஸ்கெலியா பேருந்துக்கு மாற்றி தருமாறு கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அரச பேருந்து நடத்துனர் ஹட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இறங்கும் வேளையில் பொதிகளை அங்கு நிறுத்தி இருந்த தனியார் பேருந்தில் மாற்றம் செய்து கொடுத்து விட்டு சென்றார். அதன் பின்னர் அந்த பெண் தனது பொருட்கள் எந்த பேருந்தில் உள்ளது என தெரியாமல் அங்கு இருந்த பேருந்தில் ஏறி மஸ்கெலியா வந்து மீண்டும் ரக்காடு கிராமத்திற்கு சென்று விட்டார்.
தனியார் பேருந்து உரிமையாளரும் சாரதியுமான கே.எம்.ரோகன அத்துல அந்த இரண்டு பொதிகளையும் மிக கவனமாக பாதுகாத்து உரிமையாளரை தேடிச் சென்று நேற்று [6] மதியம் மஸ்கெலியா நகரில் வைத்து ஒப்படைத்தார். அப் பொதியில் இருந்த 51500 ரூபாய் பணத்தை கையளித்த போது குறித்த பெண் கண்ணீர் மல்க அந்த பணத்தை சந்தோஷமாக பெற்றுக்கொண்டார்.
சாரதி கே.எம்.ரோகன அத்துல நேர்மையான சாரதி என பலராலும் பாராட்டப்பட்டார்.