இருபத்தி ஆறு வயதுடைய திருமணமாகாத இளைஞன், தனது அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டு, தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹபரணை, திருகோணமலை வீதியில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்தது. இவர் நேற்று முன்தினம் (02) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த 1ஆம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற அவர், சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் , மறுநாள் (2ஆம் திகதி) தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தந்தை ஹபரணை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.