நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாகவும் தமிழரசுக்கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்தையொட்டி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் தமிழ் தேசிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி நடந்த ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் சந்தித்தோம். இருந்தபோதும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழில் இருண்டு நாள் இடம்பெற்ற கூட்டத்தின் அடிப்படையில் தமிழர்களுக்காக அறிமுகப்படுத்திய சங்கு சின்னத்தின் ஊடாக இந்த பொது தேர்தலை சந்திப்பது என்று எகமனதாக தீர்மானிக்கப்பட்டது
அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் குத்துவிளக்கு சின்னத்துக்கு பதிலாக சங்கு சின்னத்தை மாற்றி எடுப்பதற்கான வேண்டுகோள் தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்பட்டுள்ளது அதற்கான முடிவு இரு தினங்களில் கிடைக்கும்.
தெற்கிலே ஊழல் அற்ற ஒரு அரசாங்கத்தை கொண்டுவரவேண்டும் என்ற ரீதியில் தெற்கு மக்கள் பெரிவாரியாக வாக்களித்து ஆட்சி மாற்றம் கொண்டுவந்துள்ளனர் அதேவேளை வடக்கு கிழக்கிலும் கணிசமான வாக்கு கிடைத்துள்ளது அதன் பிரகாரம் நாடாளுமன்றத்திற்கு புதுமுகங்கள் கொண்டுவரவேண்டும் என்றது இங்கும் வலுப்பெற்றுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தியை நோக்கி எங்கள் மக்களும் நகர்வதை பார்க்ககூடியதாக இருக்கின்றது.
எனவே தமிழ் மக்கள் ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும் தெற்கில் இருக்கும் பிரச்சனை வேறு வடகிழக்கில் இருக்கும் பிரச்சனை வேறு தெற்கிலுள்ள சிங்கள மக்களுக்கு தேவையானது வேறு எமது மக்களுக்கு தேவையானவை வேறு எங்கள் மக்கள் 7 தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் ரீதியாக எங்களது உரிமைகளை பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர் இந்த வகையில் இதுவரை தீர்வு வரவில்லை
தேசிய மக்கள் சக்தியால் கூட அந்த தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கின்றது தற்போதைய ஜனாதிபதி தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு எதுவிதமான காத்திரமான கருத்துக்களை கூறவில்லை கோடா ஜனாதிபதியாக வந்தவுடன் அனுராதபுரத்தில் சத்தியபிரமானம் எடுக்கும் போது தான் சிங்கள பௌத்த ஜனாதிபதி என்றார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் சுயரூபம் பற்றி மக்களுக்கு தெரியது ஒரு இனவாதி இனவாதம் பேசவேண்டிய தேவை இல்லை அவர் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடக தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடாது என களத்தில் நின்று போராடிய ஒரு போராளி எனவே அவரது மன நிலை எப்படி இருக்கும் என்பதை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் இளைஞர்களை புதுமுகங்களை வரவேற்கின்றோம் நாங்கள் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என ஆசைப்பட்டு ஆயுதம் தூக்கி விடுதலைக்காக போராடியவர்கள் அல்ல நாங்கள் சந்தியிலே சாரம் இல்லாமல் செத்துக்கிடப்பதற்காகதான் ஆயுதம் தூக்கினோம் நாடாளுமன்ற கதுரைகளுக்கு ஆசைப்பட்டு போராட்டத்துக்கு போனவர்கள் அல்ல
இருந்தபோதும் துரஸ்டவசமாக மக்களுக்காக அரசியலில் நிற்கவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது எனவே இளைஞர்கள் புதுமுகங்கள் வரவேண்டுமா? எமது மக்களது உரிமையை பெறுவதற்கு அரசியல் ரீதியாக போராடுவதற்கு நீங்கள் தயாரா ? தமிழ் தேசியபற்றுள்ளவர்கள் படித்த பண்பான மற்றும் தேர்தலில் வெல்லக்கூடிய யுவதிகள் இளைஞர்கள் இருக்கின்றீர்களா? முன்வரவும்.
வெறுமனவே சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களில் இளைஞர்களுக்கு இடம் கொடுங்கள் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள் என எழுத்து மூலமாக எழுதுவதால் எந்த பிரயோசனமும் இல்ல எனவே முன்வாருங்கள் உங்களுக்கு பின்னால் இருந்து வழிநடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
எனவே தமிழ் மக்கள் உரிமைகள் பெறப்படவேண்டும் அவர்கள் நிம்மதியாக இணைந்த வடகிழக்கில் சுயாட்சியுடன் சுயநிர்ணய உரிமைகளை பெற்று வாழவேண்டும் என்பதற்காக எங்களை நாங்கள் அற்பணித்தவர்கள் நாங்கள் எப்போதும் விட்டுக் கொடுப்புக்கு தயாரக இருக்கின்றோம் எனவே இளைஞர் யுவதிகளே தேசிய கட்சிகளின் அலைக்கு பின்னால் இழுபட்டுச் செல்வீர்களானால் எங்களுடைய மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மாத்திரமல்ல சூனியமாகும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்றார்.