பொய்யான பிரசாரங்களை செய்த தலைவர்கள் இன்று அனுரவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவிப்பு.
ஜனாதிபதியின் தேர்தலிக் போது மலையக மக்களை திசை திருப்பவதற்காக பொய்யான போலி பிரசாரங்களை செய்த மலையக அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இன்று அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது மிகவும் வேடிக்கையானது என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்தார்.
இன்று கொட்டகலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் அதிகபடியான வாக்குகளை பெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9 வது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்
அவருக்கு மலையக மக்கள் சக்தியும் மலையக மக்களும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம் எனினும் மலையகத்தை பொருத்த வரையில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று மலையக மக்கள் சக்தியின் வேண்டுகோளினை ஏற்று பெறுவாரியான மக்கள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அதிகபடியான வாக்குகளை அளித்துள்ளனர்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவருக்கு நுவரெலியா மாவட்டத்தில் வெறும் 5000 வாக்குகளே கிடைத்திருந்தது ஆனால் இம் முறை அவர் நுவரெலியா மாவட்டத்தில் 105000 வாக்குகளை பெற்றுள்ளார் இந்த வாக்கு வீதம் இன்னும் அதிகரித்திருந்திருக்கலாம் மலையக தலைவர்கள் அவர் வந்தால் தொழிசாலைகளை எரிப்பார் மலையக மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்துவார் அது மாத்திரமின்றி வாழ வழி இல்லாது போய்விடும் என்றெல்லாம் போலி பிரசாரங்களை மலையக தலைவர்கள் முன்னெடுத்தன் காரணமாக ஒருசிலர் பயந்தனர் இதனால் வாக்குகள் குறைந்தது ;அப்படியில்லாதுயிருந்திருந்தால் அதிகமாக வாக்குகள் அவருக்கிடைத்திருக்கும் இந்நிலையில் அவர்கள் இன்று அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு கைலாக்கு செய்து வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் நீங்கள் செய்த போலி பிரசாரங்களை மக்கள் இப்போது சிந்தித்து பார்க்க வேண்டும் அது மாத்திரமன்றி இன்று சில வேளைகளில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் அப்போது பாராளுமன்றத்தில் அதிகமான ஆசனங்கள் அவரது கட்சி பெறுவதன் மூலமே மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதி நிறைவேற்ற முடியும் எனவே மக்கள் இதனை உணர்ந்து அவரது கட்சிக்கு வாக்களித்து அதிமான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வாக்களிக்கு முன்வரவேண்டும் மலையக மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு உருதுணையாக நின்று அச்சமின்றி மக்களிடம் வாக்குகளை கோரியது அதற்கமைய மக்கள் அதிகமாக வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தார்கள் அதற்காக மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கௌரவ அனுரகுமார திசாநாயக்க அவர்கள் மிகவும் எளிமையான முறையில் தனது பதவியேற்பு வைபவத்தினை செய்து முடித்துள்ளார் இதற்கு ஒரு ஐம்பதாயிரம் ரூபா தான் செலவழிந்திருக்கும் கடந்த காலங்களில் பதவியேற்பு வைபவங்களின் போது கோடிக்கணக்கான மக்கள் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது மலையகத்திலும் வெற்றிபெற்றவுடன் கூட்டம் கும்மாளம் என பலர் கூத்தடித்தார்கள் இன்று அவ்வாறான ஒரு நிலையில்லை மிகவும் அமையான முறையில் நாடு இருக்கிறது.
அது மாத்திரமன்றி பதவியேற்பு உரையின் போது பல மக்கள் நல திட்டங்களையும் உடன் அமுலாக்கினார் இவர் ஒரு ஏழ்மையிலிருந்து பதவிக்கு சென்றதனால் மக்களின் கஸட்ட நஸ்ட்டங்கள் தெரியும் எனவே அவரி;ன் கைகளை பலப்படுத்துவதன் மூலம் மலையக மக்கள் பல்வேறு நன்மைகளை பெற்றுவிடலாம் என அவர் இதன் போது தெரிவித்ததுடன் நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இவர்களின் போலி வார்ததைகளுக்கு ஏமாறாது யதார்தத்தினை உணர்ந்து இவரை ஆதரிக்க ஏனையவர்களும் முன்வர வேண்டும் என அவர் இதன் போது கேட்டுக்கொண்டார்.
இந்த ஊடக சந்திப்பின் போது அவரது கட்சியின் முக்கியஸத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.