மகாராஷ்டிரா மாநிலம் அமராவதிக்கருகே தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பஸ் வளைவு ஒன்றில் திரும்பும்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 50 பேருடன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு, பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
மேலும், 40இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.