ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவில் நாளை நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டத்தில் 5 வெற்றி, 3 தோல்வி பெற்று 10 புள்ளிகளுடன் 5 இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள ஆட்டங்கள் அனைத்தும் கொல்கத்தாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ADVERTISEMENT