மலேசியாவுக்கு எதிராக 59-19 புள்ளிகளால் அபார வெற்றியீட்டிய இலங்கை ரக்பி அணி ஆசியாவின் முதல் நான்கு ரக்பி அணிகளுக்குள் இடம்பிடித்துள்ளது. இதன்படி நிகல் ரத்வத்த தலைமையிலான இலங்கை ரக்பி அணி ஆசிய ரக்பியில் உயர்மட்ட தொடரான 2025 ஆசிய ரக்பி சம்பியன்சிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங் மற்றும் தென் கொரியாவுடன் இணைந்து ஆடவுள்ளது.
ADVERTISEMENT