ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்து வார்னரின் சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார். 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் :
- கே.எல்.ராகுல் 130 இன்னிங்ஸ்
- டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸ்
- விராட் கோலி 157 இன்னிங்ஸ்
- ஏபி டிவில்லியர்ஸ் 161 இன்னிங்ஸ்
- ஷிகர் தவான் 168 இன்னிங்ஸ்