வெல்லம்பிட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த டான் பிரியசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று இரவு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் இறக்கவில்லை என்றும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பின்னர் தெரிவித்தார்.
இன்று காலை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.
டான் பிரியசாத்தின் தோள்பட்டை பகுதியில் இரண்டு முறையும், மார்பு பகுதியில் இரண்டு முறையும் சுடப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் மற்றொருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.