நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இன்று (21) காலை இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவத்தில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT