எதிர்வரும் 19.04.2025 அன்னை பூபதி அவர்களின் 37 ம் ஆண்டு நினைவு தினம் நடைபெறவுள்ள நிலையில்
1.மட்டக்களப்பு தலைமை பொலிஸ்
2.சந்திவெலி பொலிஸ்
3.காத்தான்குடி பொலிஸ்.
4.கொக்குவில் பொலிஸ்
ஆகியோரால் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றம் மற்றும் ஏறாவூர் நீதவான் நீதி மன்றம் ஆகிய மன்றுகளை அணுகி
மேற்படி நிகழ்வுகளில் கலந்து கொள்வது தொடர்பாக கீழ் கானும் பெயர்களையுடைய 1.சபாரெத்தினம் சிவயோகநாதன் {சீலன்} 2. திரு செல்வகுமார் 3.திரு அரவிந்தன் ஆகியேருக்கு எதிராக நிபந்தனை களுடன் கூடிய நீதவான் நீதிமன்ற தடையுத்தரவினை பெற்றுள்ளனர்.
இன்று மாலை 5.15 மணிக்கு ச.சிவயேகநாதன் அவர்களது வீட்டிற்கு சென்ற கொக்குவில் பொலிசார் மேற்படி மூன்று பொலிஸ் நிலையங்கள் சார்பிலும் பெற்றுக் கொண்ட நீதி மன்ற தடையுத்தரவுகளையும் வழங்கிச் சென்றனர்.
தடையுத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது மேற்படி நான்கு பொலிஸ் பிரிவுகளிலும் அன்னை பூபதி தொடர்பாக அஞ்சலி நிகழ்வுகள் செய்வதையோ ஒன்று கூடுவதையோ ஊர்வலம் நடாத்துவதையோ தடை செய்வதாகவும் அத்துடன் 2011.08.39 ம் ஆண்டின் விசேட வர்தமாணியின் பிரிவு 01 தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரணித்தவர்களை நினைவு கூறும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட இயக்கத்தினை மீழுருவாக்கம் செய்வதனை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கும் தற்பொழுது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள புலம் பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டினால் இச் செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு நீதவான் நீதி மன்றம் தடையுத்தர வினை வழங்கியுள்ளது.
அதேநேரம் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதி அவர்களின் சமாதியில் அமைதியான முறையில் நினைவு கூறுவதை மன்று அனுமதிக்கின்றது எனவும் சுட்டிக் காட்ட ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
