தமிழ் திரையுலகில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அர்ஜூன். ரசிகர்கள் இவரை ஆக்சன் கிங் என அழைக்கின்றனர். கடந்தாண்டு இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அவரது வீட்டில் மீண்டும் நல்ல செய்தி வந்திருக்கிறது. கூடிய விரைவில் திரை பிரபலங்கள் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இதனை ஆக்சன் கிங்கும் அறிவித்திருப்பதால் ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர்.தமிழ் சினிமாவில் நாட்டுப்பற்றை திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தவர் அர்ஜூன். இவரது படங்களில் அதிகம் சண்டை காட்சிகள் ரசிக்கும் படி இருக்கும். ஆக்சன் காட்சிகளில் வித்தியாசம் காட்டக்கூடியவர் அர்ஜூன். இதனால் இவருக்கு ஆக்சன் கிங் என பெயர் வர காரணமாக இருந்தது. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். மேலும், 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த ஃபேவரட் ஹீரோவாகவும் கலக்கியவர், நிஜ வாழ்விலும் கதாநாயகனாக ஜொலிக்கிறார்.
நடிகர் அர்ஜூன் கன்னட நடிகையான நிவேதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்நிலையில், ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஐஸ்வர்யா -உமாபதிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பும் உமாபதி படங்களில் நடித்து வருகிறார்.
13 வருட காதல்: அர்ஜூனின் இரண்டாவதுமகளுக்கு சினிமா மீது துளிகூட ஆர்வம் கிடையாது. அவருக்கு பெரிய பிசினஸ் மேன் ஆக வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு பெண்கள் உபயோகிக்கும் ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இதில், அவருக்கு மிக உயர்ந்த நம்பிக்கை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அர்ஜூன் இரண்டு மகள்களின் தனிப்பட்ட முடிவில் இதுவரை தலையிட்டதில்லையாம். இந்த சூழலில்,அர்ஜூனின் இரண்டாவது மகளான அஞ்சனா தனது காதலரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இருவரும் 13 வருடமாக காதலித்து வந்துள்ளனராம். அர்ஜூன் -நிவேதிகா, உமாபதி – ஐஸ்வர்யா முன்பு அஞ்சனாவிற்கு அவரது காதலன் பிரபோசலுக்கு அஞ்சனா சம்மதம் தெரிவித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது முதல் மகளுக்கு நடந்தது போன்றே அர்ஜூன் இரண்டாவது மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். அஞ்சனாவின் காதலன் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், இருவருக்கும் இத்தாலியில் நிச்சயம் நடந்து முடிந்திருக்கிறது. 13 வருட காதலரை அஞ்சனா கரம்பிடிக்கும் நல்ல செய்தியை அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதேபோன்று கூடிய விரைவில் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜூன் குடும்பம் ரொம்ப ஹேப்பியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இணையத்தில் இவர்களது க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தை வட்டமடித்த வண்ணம் இருக்கிறது.




