மராகேஷிலிருந்து புறப்பட்ட பிறகு ஃபெஸ்-சாய்ஸ் விமான நிலையத்தில் CN-TKC என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஹாக்கர் 800XP ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையின் முனையிலிருந்து விலகி கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் பயணிகள் யாரும் இல்லை எனவும் மூன்று பணியாளர்கள் மட்டுமே விமானத்தில் இருந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT



