இன்று அதிகாலை முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிவனடி பாத மலைக்கு செல்லும் சாலையில் மலை உச்சியில் இருந்து மழை நீர் படிக்கட்டுகளில் அதிகளவில் வடிந்து செல்வதால் சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் பெருந் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பண்ணையாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளர் தங்கள் மாதாந்த வேதனம் பெறும் நாளான இன்று கன மழை பெய்து வருவதால் துயரடைந்துள்ளனர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதை காண கூடியதாக உள்ளது.
குறிப்பாக விமலசுரேந்திர, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, காசல்ரீ, மவுசாகல, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.


