சுதந்திரமும் சுபிட்சமும் மிக்க நாளாக மலர வாழ்த்துகிறேன் என்று புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடும்போது,
அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒரு மாத கால நோன்பினை பூர்த்திசெய்து உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளாம் (ஈதுல் பித்ர்) ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்கின்ற இவ்வேளையில் முஸ்லிம்களின் ஒற்றுமையினை குலைத்து எமது சமுதாயத்தினை பாரிய அழிவுப் பாதையை நோக்கி வழி நடத்த பல சதித் திட்டங்கள் உலகளாவிய ரீதியில் அரங்கேற்றப்படுகின்ற இவ்வேளையில் நாம் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் செயற்படுவதற்கும், எமது நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் மதக்கடமைகளை செய்வதுக்கும் சுதந்திரமாக எமது பொருளாதார விருத்திக்கும் இப் புனித நோன்புப் பெருநாளில் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
இந்த புனித நாளில் நம்மிடையே சகோதரத்துவம் மேலும் வலுப்பெற்று சமுதாய ஒற்றுமை நீடித்து நிலைக்க வேண்டும்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் புது நம்பிக்கையுடன் ரமழான் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கின்றது.
இந்த நோன்பு பெருநாள் மனிதன் தன் ஐம்புலன்களையும் அடக்கி, மனதை ஒருநிலைபடுத்தி வாழ்கின்ற பக்குவத்தையும் கோபம், போட்டி, பொறாமை போன்ற தீய எண்ணங்கள் மனதிலிருந்து விலகி சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் சக மனிதர்களோடு, சமூகத்தினரோடும் நன்நெறிகளை பகிர்ந்து வாழ்வதற்கு முயற்சிப்போம்.
குறிப்பாக, எமது பலஸ்தீன் மக்கள் படுகின்ற அவலங்கள் நீங்கி, உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கும் பலஸ்தீன் மக்களின் சுதந்திரத்துக்காகவும் இந்த நன்நாளில் இரு கையேந்தி பிரார்த்திப்போமாக என்றும் குறிப்பிட்டுள்ளார்.