உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய பிரச்சாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று ஆரம்பித்துள்ளது.
கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகளின் பின்னர், தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது.
ADVERTISEMENT
அத்துடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம், கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் உட்படப் பலர் கலந்துக்கொண்டார்கள்.



