அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை துஷ் – பிரயோகம் செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் தலைமை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் இன்று (28) நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர் சந்தேக நபரை அடையாளம் கண்டார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மார்ச் 10 ஆம் திகதி துஷ் – பிரயோகம் செய்யப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபர் பெண் மருத்துவரின் மொபைல் போனுடன் தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் கல்னேவ பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து 34 வயதுடைய சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்காக இன்று வெள்ளிக்கிழமை (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பாலியல் துஷ் – பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்காக, பாலியல் துஷ் – பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.