பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவடைந்த நிலையில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளிதரன் மற்றும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர்.
ஏழு அரசியல் கட்சியும் இரண்டு சுயேட்சைக்குழுக்களும் தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏனைய உள்ளூர் அதிகார சபைகளுக்கு தேர்தல் நடைபெறுகின்ற திகதியான மே மாதம் ஆறாம் திகதியே பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலும் நடைபெறும் என தெரிவித்தனர்.