திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் செயற்திட்டம் இன்று (21) திருகோணமலை நகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் (மத்திய அரசாங்கம்) த.பிரணவன் தலைமையில் நடைபெற்றது.
ADVERTISEMENT
இந் நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

