சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 13,000 சிகரெட்டுக்களுடன் நபரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றையதினம் 01.10 மணியளவில் துபாயிலிருந்து ஃப்ளை துபாய் விமானம் FZ-569 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் முன்னெடுத்து வருகிறது.