மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய ‘மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ என்னும் நூல் வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதி மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் வெளியீடு செய்யப்பட்ட ‘மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ என்னும் நூல் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம் தபேந்திரன் அவர்களிடம் இன்று(4) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதே நேரம் ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த நூலின் ஒரு தொகுதியை யாழ்ப்பாண நூலகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உட்பட முக்கியமான நூலகங்களுக்கு வழங்குவதற்காக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செ.பிரணவநாதன் அவர்களிடம் இன்று மதியம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பின் பணிப்பாளர் சக்தி ராமலிங்கம், மன்னார் ஜெயவீர ஆஞ்சநேய சுவாமிகள் ஆலயத்தின் தர்மகர்த்தா சின்னையா கிருபாகரன், சுய தொழில் முயற்சியாளர் ராகமுத்து சேதுபதி போன்றவர்கள் கலந்து கொண்டு நூல்களை வழங்கி வைத்தனர்.



