கம்பஹாவில் துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கம்பஹாவின் யகோடமுல்லவில் உள்ள மஹேன பொது மயானத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் ரி – 56 ரக துப்பாக்கி, ஒரு மகசின் மற்றும் 22 தோட்டாக்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.
ADVERTISEMENT
அவற்றை மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் பிரிவினர் நேற்று புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.