கம்பஹா மாவட்டம் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத்தேகம பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் அறையிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (25) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
இவர் நீண்ட நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த விற்பனை நிலையத்தில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், குறித்த நபர் அதிகளவில் மதுபானம் அருந்துவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சடலமானது பூகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.