கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படு கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பிரதான சந்தேகநபருக்கு உதவிய பெண் சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த பிங்புர தேவகே இசார செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண்ணைக் கண்டுபிடித்துத் தருமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
அதன்படி, தலைமறைவான பெண்ணை அடையாளம் கண்டால் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் – 0718591727 அல்லது கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி 0718591735 என்ற தொலைபேசி இலக்கங்களில் தகவல்களைத் தெரிவிக்கலாம்.
மேற்படி பெண் பற்றி தகவல்களை வழங்குபவர்களுக்குப் பொலிஸ் நன்கொடை நிதியத்தின் மூலம் சன்மானம் வழங்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.