அம்பாறை, எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (19) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரகம – அரபா நகர் 07 ஆம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
உயிரிழந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்து இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று, சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பி மறுமணம் செய்து இருந்தார்.
குறித்த பெண்ணிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்ட கணவன் அந்தப் பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி தப்பிச் சென்றுள்ளார்.
பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரைக் கைது செய்ய எரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.