தையிட்டி போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு நாளையதினம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.