தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் இன்று அதிகாலை(19) ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதிய இந்த நபர், பலத்த காயங்களுடன் தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஆணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் 65 வயது மதிக்கத்தக்க நபரே உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.