கீளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் 15 கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று(16) காலை 6.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் சாய்ந்தமருது கடற்கரை பிரதேசமும் சுத்தம் செய்யப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் இளைஞர் சம்மேளன அமைப்பின் செயற்பாட்டாளர்களும் இணைந்து சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தினை சுத்தப்படுத்தினர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கு இச்சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் டப்ளியூ. ஏ.சி.எஸ். தமயந்தி, சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி சமீஹூல் இலாஹி, அமைப்பின் தலைவரும் இளைஞர் சேவை அதிகாரியுமான அன்வர் ஏ கபூர், சாய்ந்தமருது இளைஞர் சம்மேளனத்தின் தலைவரும், அமைப்பின் செயற்பாட்டாளருமான ஏ.ஆர்.எம். ஜப்ரான், அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


