இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் இராமேஸ்வரத்தில் படகில் ஏற்றிய பெருந்தொகைப் பாதணிகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்குப் பெருந்தொகைப் பொருட்கள் கடல் வழியாகக் கடத்திச் செல்வதாகத் தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் கடற்கரையில் தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது படகில் சில மூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடினர்.
மூடைகளை மீட்ட பொலிஸார் அவற்றைச் சோதனையிட்ட வேளை பெருந்தொகைப் பாதணிகளை மீட்டனர்.
![](https://thinakaran.com/storage/2025/02/IMG-20250215-WA0001-1024x458.jpg)
![](https://thinakaran.com/storage/2025/02/IMG-20250215-WA0000-1024x458.jpg)