கடவத்தை – கணேமுல்ல வீதியில் உள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் இன்று சனிக்கிழமை (15) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு 8.00 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன்போது இந்த நபர் வனப்பகுதிக்கு வந்துள்ளதால் தீக்கிரையாகி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
