இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமானது இலங்கையில் மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதானி நிறுவனத்தின் செயலாளர் இலங்கை முதலீட்டு சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
காற்றாலை மின் திட்டத்தில் ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் காரணம் காட்டியுள்ளது.
மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக முதலீட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.