கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படும் முதியவரை அடையாளம் காண உதவுமாறு திம்புளை பத்தன பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமராவதி எனும் பெயரில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த முதியவர் கருணாகரன் என்பவரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேற்படி நபர் பிரதேசத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
மேற்படி இறந்தவரின் உடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருணாகரன் என்ற குறித்த நபரை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

