கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படு கொ லை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு இந்த கொ லை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் தாயார், தானே இந்தக் கொ லையை செய்ததாகக் கூறி பொலிஸாருக்கும், சந்தேக நபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றையும் பொலிஸார் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.
கொ லை செய்த நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், கொ லைக்கான சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.