கிளிநொச்சியில் உள்ள விவசாயிகள் உணவுத் தேவைக்காக அரிசியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தங்களின் நெல் வயல்களில் உள்ள நெற்பயிரை கைகளினால் அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
என்றும் இல்லாதவாறு இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் வயல்கள் வெள்ள அனர்த்தங்களினால் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் தொடர்ச்சியாக வெள்ள நிலைமை காரணமாக தமது உணவுத்தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கையினால் நெல் அறுவடை செய்து வருகின்றனர்.
அத்துடன் அறுவடை செய்த நெல்லினை தமது தோள்களிலே சுமந்து சென்று வீதிகளில் உலர வைத்த பின்னரே நெல்லினை பயன்படுத்த முடியும் என தெரிவித்தனர்.
அத்துடன் அறுவடை செய்த நெல்லானது தேரிய முழுமையான நெல்லாக இல்லை எனவும் தெரிவித்தனர்.