மூத்த ஊடகவியலாளரும் ஆய்வாளருமான அருணா செல்லத்துரையின் ‘இராவணனார்’ லங்கா பாங்கு; என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழறிஞர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை இலக்கியச்சுடர் கதிர்காமசேகரனும் நூல் நயவுரையினை பேராசிரியர் வா. மகேஸ்வரனும் ஆற்றியிருந்தனர்.
இதன் போது நூல் பிரதிகளை நூல் ஆசிரியர் அருணா செல்லதுரை உட்பட்ட அதிதிகள் வழங்கி வைக்க நிகழ்வில் கலந்து கொண்டோர் நூலினை பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை நூலாசிரியருக்கும் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்று இருந்தது.