IF STAR Foundation கொழும்பு கிளையானது புத்தளம் பிரதேசத்தில் உள்ள சுமார் 500 நபர்களுக்கு விசேட நிதி ஒதுக்கீட்டில் இலவச மூக்கு கண்ணாடி விநியோகத்தை ஏற்பாடு செய்திருந்தது.
IF STAR Foundation தர்மகர்த்தா M.H.M. இம்ரான், IF STAR Foundation தலைவர் லஹிரீன் சைபுதீன், IF STAR Foundation துணை அமைப்பாளர் P.PC. பெர்னாண்டோ, உதவி அமைப்பாளர் N.A.M ஷசீன், உதவி அமைப்பாளர் R.M. ரிஃபாஸ், IF STAR இளைஞர் அணி கலாச்சார செயலாளர் M. ரஷீத் மற்றும் IF STAR இளைஞர் அணி உறுப்பினர் M. அஹமத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலவச கண்ணாடி விநியோகத்தின் இரண்டாம் கட்டம் மருதானை, மாளிகாவத்தை, கொலன்னாவ, தெமட்டகொட மற்றும் கொழும்பில் மேலும் சில பகுதிகளில் எதிர்காலத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.