பிரபல தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட மேலும் சிலர் அரசியல்வாதிகளின் துணையுடன் மிக நீண்டகாலமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 17.01.2025 அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொகவந்தலாவ பகுதியில் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட மேற்படி நபர் தனது தொழிற்சங்க பலத்தால் தோட்ட தொழிலாளர்களுக்கு பல இடையூறுகளை செய்து. வந்ததோடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல சலுகைகளை பெற்று அதனை தனதாக்கி கொண்டார் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தின் காவல் தொழில் புரியும் இவர் இதனை தனது திருட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
இதன் காரணமாக தோட்ட மக்கள் அவரை தோட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தோட்ட நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர்.