அநுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், சாலியபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 145 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.