பதுளை, தெய்யன்வெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (13) மாலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெய்யன்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
இவர் பதுளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.