தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
4ஆம் வட்டாரம், கோம்பாவில் புதுக்குடியிருப்பில் அமரத்துவமடைந்த பொன்னம்பலம் கனகரட்ணம் அவரின் நினைவாக அவர்களது பிள்ளைகளால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் தைத்திருநாள் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் 30 குடும்பங்களுக்கு ஊடகவியலாளர் இ.உதயகுமாரின் ஒழுங்கபடுத்தலில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.