உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(14) தைப்பொங்கலை கொண்டாட உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான பொருட் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நாளைய தினம்(14) பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான உணவு பொருட்கள், பானை, கரும்பு உள்ளடங்கலான பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை நகர் பகுதியில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும் மக்கள் தைத் திருநாளை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.