அம்பாறை – சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் நேற்று(6) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர் மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.