கிளிநொச்சி முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் எலிக்காய்ச்சல் Leptospirosis காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சலாக Leptospirosis இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
எனவே, மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.