அனுராதபுரத்தில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாகத் தாக்கி கொ லை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அனுராதபுரம், பதவியா பகுதியை சேர்ந்த 27 வயதான ருவந்தி மங்கலிகா என்ற குடும்பப் பெண்ணே கொ லை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிள்ளையின் கற்றல் நடவடிக்கையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதில் 8 மாத கர்ப்பிணிப் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (31-12-2024) கணவரால் அடித்துக் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய், தந்தை இடையில் ஏற்பட்ட சண்டையை அவதானித்த 2ம் தரத்தில் கல்வி பயிலும் பிள்ளை அயலவர்களின் உதவியை நாடியுள்ளது. இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட அயல்வீட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் 33 வயதுடைய சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.