ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைதுறைபற்று பிரதேச செயலர், கரைதுறைபற்று பிரதேச சபைச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு மைதானத்தின் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.